Type 1 Tamil- நீரிழிவு என்றால் என்ன?

நீரிழிவு என்றால் உங்களுடைய இரத்தத்தில் மிக அதிகமாக சர்க்கரை உள்ளது என்று அர்த்தம். உங்கள் உடல் இன்சுலின் எனப்படும் ஒரு இரசாயனம், அல்லது ஹார்மோனை போதிய அளவிற்கு உருவாக்காத போது உயர் இரத்த சர்க்கரை பிரச்சனை தொடங்குகிறது. உங்கள் உடல் நீங்கள் உண்ணும் உணவின் பெரும் பகுதியை குளுக்கோஸ் என்று அழைக்கப்படும் ஒரு வகையான சர்க்கரையாக மாற்றுகிறது. இந்த சர்க்கரை உங்கள் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் உங்கள் இரத்தத்தின் மூலம் பயணம் செய்கிறது. உங்களுக்கு சக்தி அளிப்பதற்கு உங்கள் உடலின் உயிரணுக்களுக்கு சர்க்கரை தேவைப்படுகிறது. இன்சுலின் சர்க்கரை உங்கள் இரத்தத்தில் இருந்து உங்கள் உயிரணுக்களுக்கு நகர்வதற்கு உதவுகிறது. இன்சுலின் இல்லாமல், உங்கள் உயிரணுக்கள் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டிய சர்க்கரையைப் பெற முடியாது. சர்க்கரையை உங்கள் இரத்தத்தில் இருந்து உங்கள் உடல் உயிரணுக்களுக்கு நகர்த்துவதன் மூலம் இன்சுலின் உங்கள் இரத்த சர்க்கரை அளவை சாதாரணமாக வைத்திருக்க உதவுகிறது (மிகவும் அதிகமாக இல்லை, மிகவும் குறைவாக இல்லை). உயர் இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைக்க போதுமான இன்சுலின் இல்லாத போது உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று அர்த்தம். உயர் இரத்த சர்க்கரை அளவுகள் கடுமையான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப்படலாம் மற்றும் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

Type 1 Tamil- உங்களுக்கு எப்பொழுது நீரிழிவு ஏற்படுகிறது?

உங்கள் உடல் இன்சுலினை அறவே உருவாக்கவில்லை உங்கள் உடல் போதுமான இன்சுலினை உருவாக்கவில்லை, அல்லது உடல் உருவாக்கப்படும் இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை. உங்கள் இரத்தத்தில் இருந்து சர்க்கரையை உயிரணுக்களுக்கு நகர்த்துவதற்கு போதுமான இன்சுலின் இல்லாததால் இரத்த சர்க்கரை அளவுகள் அதிகமாக இருத்தல்.

Type 1 Tamil- வகை 1 நீரிழிவு

இந்த வகை 1 நீரிழிவில், உடலால் இன்சுலினை உருவாக்க முடியாது. முதியவர்களை விட பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளம் வயது வந்தவர்களிடையே வகை 1 நீரிழிவு ஏற்படுகிறது. வகை 1 நீரிழிவு கொண்ட நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த இன்சுலின் உட்செலுத்த வேண்டும்.

Type 1 Tamil- வகை 1 நீரிழிவு நோயின் அறிகுறிகள்

  • அளவுக்கதிகமான தாகம்
  • அடிக்கடி சிறுநீர்
  • கழித்தல்
  • ஒரு பழம் போன்ற
  • வாசனை
  • சோர்வு பலவீனம்
  • சிறுநீரில் சர்க்கரை
  • அளவுக்கதிகமான எடை இழப்பு

Type 1 Tamil- நீரிழிவு நோயின் சிக்கல்கள்

இரத்த ஓட்டத்திலிருந்து குளுக்கோஸை (உண்ணும் உணவுகளில் இருந்து உருவாக்கப்படுகிறது) உடலின் உயிரணுக்களுக்கு எடுத்துச் சென்று சக்திக்காக பயன்படுத்தப்படுவதற்கு இன்சுலின் தேவையான ஹார்மோன் ஆகும். போதுமான இன்சுலின் இல்லாத போது, இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கிறது, இது பின்வருபவை உள்ளிட்ட கடுமையான உடல்நல பிரச்சினைகளுக்கான ஆபத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது

  • மாரடைப்பு மற்றும் பக்கவாதம்
  • சிறுநீரக பிரச்சினைகள்
  • பாதங்களில் உணர்ச்சியின்மை மற்றும் குணமடையாத
  • புண்கள்
  • பார்வை பிரச்சினைகள்
இரத்த குளுக்கோஸ் அளவுகளை முடிந்தவரை சாதாரணமாக வைத்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயின் நீண்ட-கால சிக்கல்களைத் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்.