GDM Tamil – கர்ப்பகால நீரிழிவு என்றால் என்ன?

  • கர்ப்பகாலத்தின் பொது ஏற்படும் நீரிழிவு கர்ப்பகால நீரிழிவு எனப்படுகிறது.
  • கர்ப்பகாலத்தில் தேவைப்படக் கூடிய கூடுதல் இன்சுலின் (இரத்தத்தில் இருக்கக் கூடிய குளுக்கோஸை கட்டுப்படுத்தக் கூடிய முக்கியமான ஹார்மோன்) தேவையை உங்கள் உடலால் போதுமான அளவு உற்பத்தி செய்யாத போது இது ஏற்படும். இதன் விளைவாக இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
  • பொதுவாக கர்ப்பகாலத்தின் நடுப்பகுதியில் அல்லது கர்ப்பகாலத்தின் இறுதியில் கர்ப்பகால நீரிழிவு தொடங்கும்.

GDM Tamil – கர்ப்பகால நீரிழிவு எவ்வளவு பொதுவானது?

  • கர்ப்பகால நீரிழிவு மிகவும் பொதுவானது.
  • கர்ப்பகாலத்தின் போது 100 -இல் 18 பெண்களை இது பாதிக்கலாம்.

GDM Tamil – எடை அதிகரிப்பு

  • நன்கு கட்டுப்படுத்தபட்ட இரத்த சர்க்கரை நிலையுடன் உடல் எடை அதிகரித்தல். கர்ப்பகாலத்தின் போது உங்களின் எடையும், எடை அதிகரிப்பும் கருவின் எடை அதிகரிப்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.
  • உங்கள் BMI அதிகமாக இருந்து, கர்ப்பகாலத்தில் உடல் எடையும் அதிகரித்தால், உங்கள் கருவின் எடையும் அதிகரிக்கும். எனவே, பிறப்பதற்கு முன்பே கருவில் இருக்கும் குழந்தை அதிக எடையுடன் இருக்கக்கூடிய ஆபத்து உள்ளது.
  • கர்ப்பகாலத்தின் முதல் பாதியில் சிறிதளவும், இரண்டாம் பாதியில் அதிகமாகவும் உடல் எடையை அதிகரிக்க முயலலாம்./li>