New to Insulin Tamil – எனக்கு இன்சுலின் ஏன் தேவைப்படுகிறது?

இது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை சீரமைக்க கணையத்தால் உருவாக்கப்படும் ஹார்மோன் ஆகும். இன்சுலின் இல்லாத நிலையில் நமது உடலில் உள்ள உயிரணுக்கள் குளுக்கோஸை சக்தியின் ஆதாரமாக பயன்படுத்த முடியாது. நீங்கள் நீரிழிவால் பாதிக்கப்படும் பொழுது , உங்கள் உடல் இன்சுலினை உருவாக்குவதில்லை, அல்லது உருவாக்கப்படும் இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை. எனவே, உங்களுக்கு வெளிப்புற இன்சுலின் தேவைப்படுகிறது. இன்சுலின் பேனா, ஒரு சிரிஞ்ச், அல்லது இன்சுலின் பம்ப் கொண்டு உட்செலுத்துவதன் மூலம் உங்களுக்கு தேவையான இன்சுலினை பெறலாம். இன்சுலின் எடுத்துக்கொள்வது: உங்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் உங்களுக்கு சக்தி கொடுக்கும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும்

New to Insulin Tamil – உடலில் இன்சுலின் சுரத்தல்

உண்ணாநிலையின் போது சுரக்கும் இன்சுலின் அடிப்படை (Basal) இன்சுலின் எனப்படும். உணவு உண்ட பின்னர் அதிகரிக்கும் இரத்த குளுக்கோஸ் அளவுகளுக்கு ஏற்ப இன்சுலின் சுரத்தல் அதிகரிக்கிறது. வெளிப்புறத்திலிருந்து இன்சுலின் உட்செலுத்தப்பட தேவைப்படுகிறது என்பதால் நீரிழிவு நோயில் இந்த செயல்முறை பாதிக்கப்படுகிறது.